'ஆளே இல்ல சைக்கிள்'.. 'நீங்க ஓரமா இருந்தாலே போதும்'.. சாதனை கண்டுபிடிப்பு.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | Aug 20, 2019 12:32 PM

பெரிய நிறுவனங்கள் எல்லாம் தானியங்கி கார்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆளே அமராமல் இயக்கக் கூடிய சைக்கிளை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.

China auto cycle that can obey humans command and run

நியூரல் நெட்வொர்க்களுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் பண்ணக்கூடிய சிப் பொருத்தப்பட்ட சைக்கிளை சீனாவின் சிங்ஹுவா பல்கலைக்கழக கணினியியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த சிப்பினால், முன்னால் இருக்கும் தடை, ஆட்களின் குரலை வைத்து வேகக் கட்டுப்பாடு, சமநிலைக்குக் கொண்டுவருவது என எல்லாவற்றையும் செய்ய முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

டியான்ஜிக் (Tiangic) எனப்படும் இந்த கம்ப்யூட்டர் சிப்தான் மேற்சொன்ன, அதாவது ஒரு சைக்கிள் ஓட்டும் ஆள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வது. அதையும் மனித சக்தியை விட கூடுதலான வேகத்திலும், துல்லியமான செயல்பாட்டிலும் இந்த கருவியால் கையாள முடியும் என்கிறனர் இந்த ஆராய்ச்சிக் குழுவினர்.

மெஷின் லேர்னிங்கின் உதவியுடன் மனித மூளை போன்ற ஒரு நியூரல் நெட்வொர்க் மூலம் இயங்கும் இந்த தானியங்கி மிதிவண்டிக்கான சிப், ஒரு அரியவகை கண்டுபிடிப்பாகப் பார்க்கப் படுகிறது. முன்னதாகவே தானியங்கி மிதிவண்டிகள் வந்தாலும் கூட, இந்த சிப் இருப்பதனாலேயே இந்த மிதி வண்டி சிறப்பம்சங்கள் கொண்டு விளங்குகிறது.

Tags : #AUTOCYCLE #CHINA #VIRAL