'உள்ள வெஜிடபிள்ஸ் மட்டும் தான் இருக்கு...' 'என்ன இருக்குன்னு நாங்க பாத்துக்குறோம்...' 'செக் பண்ணினப்போ ஒரு கோடி மதிப்புள்ள...' லாக்டவுனில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 05, 2020 08:33 PM

தமிழக எல்லையிலிருந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட ஒரு கோடி மதிப்பினால புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Drugs trafficking and put in a vegetable cart

தற்போது தமிழகம் எங்கும் கொரோனா வைரஸ் பரவும் வீதத்தை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போல் கேரளாவிலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் சில சமூக விரோத கும்பலை சேர்த்தவர்கள்  ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா, மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.

ஊரடங்கால் தற்போது மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், மற்ற போதை பொருட்களான பான் மசாலா, குட்கா, மற்றும் புகையிலை பொருட்கள் கேரள எல்லையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும் இந்த போதை பொருட்கள் வாகனங்களின் மூலம் கடத்தி செல்லப்பட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் தீவிரமாக பரிசோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதை அடுத்து குமரி மாவட்டம் கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு காய்கறி ஏற்றிக்கொண்டு வாகனம் வந்தது. உள்ளே என்ன இருக்கிறது என்று விசாரித்தபோது காய்கறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள்மேல் சந்தேகம் அடைந்த போலீசார் வண்டியினுள் சோதனை செய்த போது ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா, மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் களியக்காவிளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், குடோன்களில் பதுக்கி வைத்திருந்த இருந்த குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஷாபி, அசப், அஷ்ரப், ரெஜித், ரசாக் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் களியக்காவிளையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இதேபோல் பல இடங்களில் கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் மறைத்து போதைப்பொருட்களை கடத்தி வருவதாகவும், இதை பல மடங்கு விலையில் விற்று வருவதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

Tags : #DRUGS