'கொஞ்சம் கஷ்டமான முடிவு தான் இது' ... 'எல்லாரும் என்ன மன்னிச்சுக்கோங்க' ... ஊரடங்கிற்கு பின் முதல் முறையாக மோடி பேசியது என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 29, 2020 02:57 PM

ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை சிரமப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Modi speech after whole India lockdown due to Corona Virus

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டினுள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருந்த போதும் சில பேர் எந்த தேவையுமில்லாமல் பொது வெளிகளில் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கி பாத் வானொலி மூலம் உரை நிகழ்த்தும் பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி கூறுகையில், 'மக்களின் அன்றாட வாழ்வில் சிரமங்களை ஏற்படுத்தும் முடிவுகளை நான் எடுத்ததற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். கொரோனா பரவலுக்கு எதிரான போர் கடினமானது. அதனால் இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையுள்ளது. இந்த போராட்டம் வாழ்வா சாவா போன்றது. அதனால் இது போன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது' என்றார்.

இதுகுறித்து மோடி மேலும் கூறுகையில், 'கொரோனா நோயால் பாதிக்கப்படாமல் இருக்க தொடக்கத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை இந்தியா மேற்கொண்டு வருகிறது. செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு நாம் நாட்டிற்காக போராட வேண்டும். விதிகளை மீறி வீட்டைவிட்டு வெளியே நடமாடும் வரும் சிலரால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியாது' என்றார்.

கொரோனா வைரசிற்கு எதிரான இந்த போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #NARENDRA MODI #LOCKDOWN #CORONA AWARENESS