"மனைவிய ATM மாதிரி USE பண்ணிருக்கீங்க".. விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போன பெண்.. நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.
கடன்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 1991 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. சொந்தமாக தொழில் செய்துவந்த அவரது கணவர் கடனால் பாதிக்கப்பட்ட நிலையில், வங்கியில் வேலைக்குச் சென்று கடனை திரும்ப அடைத்திருக்கிறார் அந்தப்பெண். மேலும், துபாயில் தனது கணவருக்கு சலூன் துவங்கவும் பண ரீதியாக உதவி செய்திருக்கிறார். ஆனால், கடனை திரும்ப செலுத்தாமல் தான் கொடுத்த பணத்தை சொந்த செலவுகளுக்கு அவரது கணவர் பயன்படுத்தி வந்தது அப்பெண்மணிக்கு தெரியவந்திருக்கிறது. மேலும், துபாயிலும் சலூனை சரியாக நடத்தாமல் நாடு திரும்பியிருக்கிறார் அவரது கணவர். இதனால் தனக்கு மேலும் கடன்சுமை ஏற்பட்டதாகவும், தன்னிடம் பணத்துக்காக மட்டுமே பழகிவருவதாகவும் தனது கணவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் அந்தப்பெண். மேலும், தனக்கு விவாகரத்து வழங்கிட வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
ஆனால், இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் அந்தப்பெண். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனைவியை ATM இயந்திரம் போல பயன்படுத்துவது ஒருவகையில் மனரீதியான கொடுமைதான் என தெரிவித்திருக்கின்றனர்.
விவாகரத்து
இதுகுறித்து பேசிய நீதிபதிகள்," அவர் அந்த பெண்ணை ஒரு பணம் பெறும் இயந்திரமாகவே கருதினார். மனைவியிடம் உணர்ச்சிப்பூர்வமான பற்றுதல் இல்லை. அவருக்கு இயந்திரப் பிணைப்பு மட்டுமே இருக்கிறது. கணவரின் நடத்தையால் மனைவி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில் கணவனால் மனைவிக்கு ஏற்பட்ட வலியை மனரீதியான துன்புறுத்தலாகவே கருதலாம்.இதனை அடிப்படையாகக்கொண்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கிட முகாந்திரம் உள்ளது" என்றனர்.
மேலும், "இந்தக் காரணிகளையெல்லாம் குடும்ப நீதிமன்றம் பரிசீலிக்கத் தவறிவிட்டது. மேலும், மனுதாரரிடம் நீதிமன்றம் குறுக்கு விசாரணை செய்து அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை" எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
Also Read | பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு.. இந்தியரான ரிஷி சுனக் 3-வது சுற்றிலும் வெற்றி.. முழு விபரம்..!