மனைவியை கொன்றுவிட்டு இறந்ததாக நினைத்து கணவர் எடுத்த திடுக்கிடும் முடிவு.. கடைசில தெரிய வந்த அதிர்ச்சி உண்மை.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடும்ப தகராறின் பெயரில், மனைவியை கத்தியால் குத்தி விட்டு, பின்னர் கணவர் எடுத்த முடிவு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "இவ்ளோ பெரிய தார்பாய புடிச்சிட்டு மழை'ல எங்க போறாங்க??.." சாலையில் வேற லெவல் காட்டிய மக்கள்.. வைரல் காரணம்
கோவை மாவட்டம், ரத்தினபுரி அருகே அமைந்துள்ள கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவியின் பெயர் ஷாலினி.
இவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கும் முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
கணவன் - மனைவி இடையே தகராறு
இதனிடையே, பூபாலன் மற்றும் அவரது மனைவி ஷாலினி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும் வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கடந்த சில தினங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்த போது, கோபத்தில் இருந்த பூபாலன், அங்கிருந்து கிளம்பி அவரது சொந்த ஊரான சூலூருக்கு சென்று, அங்கேயே வேலை பார்த்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, சில தினங்கள் கழித்து தனது மனைவி, குழந்தைகளை பார்க்க மீண்டும் ரத்தினபுரிக்கு வந்துள்ளார் பூபாலன். அப்போது, மனைவி ஷாலினிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருப்பதாக கூறி, சந்தேகத்தில் மனைவியுடன் தகராறில் ஈடுபட தொடங்கி உள்ளார் பூபாலன். தொடர்ந்து, வெளியே சென்ற பூபாலன், மது அருந்தி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து, மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கி உள்ளார்.
வாலிபர் எடுத்த முடிவு
அந்த சமயத்தில், வாக்குவாதம் வலுக்கவே ஆத்திரம் அடைந்த பூபாலன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷாலினியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழவே, மனைவி உயிரிழந்ததாக நினைத்த பூபாலன், அறைக்கு சென்று அங்கே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கு மத்தியில், கத்திக் குத்து பட்டு கிடந்த ஷாலினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவலறிந்து வந்த போலீசார், பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியை கொலை செய்ததாக கருதி, கணவர் எடுத்த முடிவு, அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | வீடியோ வெளியிட்டு.. 'தல'ய வாழ்த்திய 'சின்ன தல'.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. வைரலாகும் ட்வீட்!!

மற்ற செய்திகள்
