புருஷன் வர 15 நாள் ஆகும்.. காதலனுடன் லாட்ஜுக்கு சென்ற மனைவி.. விஷயம் கேள்விப்பட்டு நேரா ரூமுக்குள்ள நுழைஞ்ச கணவன் செஞ்ச காரியம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது மனைவியை லாட்ஜுக்கு அழைத்துச்சென்ற நபரை கணவர் கொலை செய்துவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் டெல்லி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | கை தவறி ஆற்றில் விழுந்த போன்.. 10 மாசத்துக்கு அப்பறம் கிடைச்சும் Work ஆன அதிசயம்..!
டெல்லியைச் சேர்ந்தவர் ரிஷப் சக்சேனா. 32 வயதான இவருக்கும் ரவ்லீன் சாவ்லா என்ற பெண்ணுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், சாவ்லா திருமணத்திற்கு பிறகும் சன்னி ஷெராவத் என்னும் இளைஞருடன் பழகிவந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்துகொண்ட சக்சேனா இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது.
சுற்றுலா
சக்சேனா சொந்த தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த வாரம் பணிநிமித்தமாக அவர் வெளியூர் சென்றிருக்கிறார். திரும்பி வர 15 நாட்கள் ஆகும் என மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் சக்சேனா. இதனையடுத்து, சாவ்லா தனது ஆண் நண்பருடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். மணாலியில் உள்ள சொகுசு விடுதியில் சன்னி ஷெராவத்தும் சாவ்லாவும் தங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த விஷயம் சக்சேனாவுக்கு தெரிய வந்திருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், நேரடியாக விமானம் மூலமாக இமாச்சல பிரதேசம் சென்று, அவர்கள் தங்கியிருந்த சொகுசு விடுதிக்கு சென்றிருக்கிறார். இருவரும் தங்கியிருந்த ரூமுக்கு சென்ற சக்சேனா கதவை தட்டவே, உள்ளே இருந்த சாவ்லா மற்றும் சன்னி இருவரும் பதற்றமடைந்திருக்கிறார்கள். இதனையடுத்து உள்ளே சென்று தகராறில் ஈடுபட்ட சக்சேனா சன்னியை கடுமையாக தாக்கியுள்ளார்.
அதிர்ச்சி
இதனால் சன்னி சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது உயிரையும் சக்சேனா மாய்த்துக்கொண்டார். இதில் சாவ்லா லேசான காயத்துடன் தப்பித்திருக்கிறார். இதனிடையே சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி பணியாளர்கள், நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள் மரணமடைந்த சன்னி ஷெராவத் மற்றும் ரிஷப் சக்சேனா ஆகிய இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். காயமடைந்த சாவ்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், சாவ்லாவிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த நபர், தனது மனைவியை லாட்ஜுக்கு அழைத்துச் சென்ற நபரை கொன்றுவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.