"நான் மட்டும் அங்க போகலன்னா.." வற்புறுத்தும் கணவர்.. பதற வைத்த மனைவியின் புகார்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jul 06, 2022 11:38 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மீது கொடுத்த புகார் ஒன்று, பலரது மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

up woman files complaint against her husband on wife swapping

சுமார் 30 வயதை நெருங்கும் பெண் ஒருவர், முசாபர் நகரில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

வலுக்கட்டாயமாக முயன்ற கணவர்

அதன்படி, குருக்ராம் பகுதியில் வசிக்கும் நபரும், தொழிலதிபருமான ஒருவர், தனது மனைவியை மிரட்டி டெல்லியில் நடக்கும் மனைவியை மாற்றும் விருந்துகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்வதும், அங்கே தனது உடன் பிறந்த சகோதரருடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தவதாகவும் அந்த பெண் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, அந்த பெண்ணுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் குருக்ராம் பகுதிக்கு அவர்கள் குடி பெயர்ந்துள்ளனர். அந்த நபர் இந்த பெண்ணுக்கு இரண்டாவது கணவர் என்றும் கூறப்படுகிறது. தனது திருமணத்திற்கு பின்னர், கணவர் செய்த விஷயங்கள் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நான் மாட்டேன்னு சொன்னா போதும்..

இது தொடர்பாக பேசும் அந்த பெண், "மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் போது, நான் அங்கே செல்ல மறுப்பு தெரிவித்தால், எனது கணவர் என்னை தாக்குவதுடன் மட்டுமில்லாமல், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்த ஆரம்பித்து விடுவார். பல நாட்கள் இப்படியான பிரச்சனைகள் நடைபெற்று வந்த போது, ஒரு கட்டத்திற்கு பிறகு என்னால் அதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன் கணவர் மீது புகார் ஒன்றை அளிக்கவும் நான் முயன்றேன். ஆனால், அப்போது எனது கணவரின் அடியாட்கள் என்னை வழிமறித்து, இந்த சம்பவம் பற்றி யாரிடமாவது சொன்னால், கொன்று விடுவதாகவும் கூறி என்னை மிரட்டினர்" என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை மாற்றும் குழு

இது பற்றி பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் மற்றும் அவரது சகோதரர் மீது சில பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இந்த சம்பவம் குருக்ராமில் நடந்தால், இந்த வழக்கு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் கூட, கேரளா, சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இப்படி மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் வெளியாகி, கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது. அதே போல, இதற்காக ஏராளமான குழுக்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் உருவாக்கப்பட்டு, மனைவியை மாற்றும் நிகழ்வு செயல்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags : #WIFE SWAPPING #HUSBAND #WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Up woman files complaint against her husband on wife swapping | India News.