அட்ரா சக்க.. ISSF உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மாஸ் காட்டிய இந்திய வீரர்.. இதுவர யாருமே இந்த சாதனையை செஞ்சது இல்லயாம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுISSF துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் இந்தியாவை சேர்ந்த மைராஜ் அகமது கான். அவருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Also Read | சைடிஷ் வாங்குவதில் வந்த தகராறு.. நண்பர்களின் செயலால் நடுங்கிப்போன மக்கள்.. திருவள்ளூரில் பரபரப்பு..!
தென்கொரியாவில் உள்ள சங்வான் பகுதியில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான மைராஜ் அகமது கான், தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஒவ்வொரு வீரரும் 40 ரவுண்டு சுட வேண்டும். இதில் மைராஜ் அகமது கான் 37 முறை இலக்கை சிதறடித்து தங்கப் பதக்கத்தினை வென்றிருக்கிறார். இது அவரது முதல் தங்கமாகும். கொரிய வீரர் மின்சு கிம் 36 புள்ளிகளுடன் வெள்ளியும் பிரிட்டனின் பென் லெவெலின் 26 புள்ளிகள் பெற்று வெண்கலமும் வென்றனர்.
முதல் இந்தியர்
இதன்மூலம் ISSF துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் மைராஜ் அகமது கான். முன்னதாக குவாலிஃபை ஆவதற்கு மைராஜ் அகமது கான் 125 முயற்சிகளில் 119 புள்ளிகள் பெற்றார். இவர் இருமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார் 2016-ல் ரியோ டி ஜெனீரியோவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் வெள்ளி வென்றுள்ளார்.
தகுதி போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற குவைத்தின் அப்துல்லா அல் ரஷிதி உட்பட நான்கு பேருடன் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார் மைராஜ் அகமது கான். இதேபோல, இந்தியாவைச் சேர்ந்த அஞ்சும் மோட்கில், ஆஷி சவுக்சீ, சிப்ட் கவுர் சாம்ரா ஆகியோர் ஆஸ்திரியாவை சேர்ந்த வீரர்களை 50 மீ ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினர். திங்களன்று பெற்ற ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிகளுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 5 தங்கம் 5 வெள்ளி, 3 வெண்கலம் இதில் அடங்கும்.
கிரிக்கெட் வீரர்
உத்தரபிரதேசத்தில் உள்ள குர்ஜாவில் பிறந்த மைராஜ் அகமது கான், ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என விருப்பப்பட்டிருக்கிறார். வினோ மன்கட் டிராபியில் தனது மாநில U-16 அணிக்கு கேப்டனாகவும் கான் இருந்திருக்கிறார். மேலும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்குடன் இணைந்து பேட்டிங் செய்துள்ளார்.
ஆனால், அதற்கு பிறகு துப்பாக்கி சுடுதலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரரான மன்ஷர் சிங், கானுக்கு பயிற்சி அளிக்க துவங்கினார்.
ISSF துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் மைராஜ் அகமது கானுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.