"பல் தேய்க்காம முத்தம் குடுத்ததால் வந்த வினை?.." அலறித் துடித்த மனைவி.. கேரளாவை அதிர வைத்த கணவர்..
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் கணவர் மற்றும் மனைவிக்கு இடையே சிறிய சண்டை ஒன்று உருவாகி உள்ள நிலையில், கோபத்தில் கணவர் செய்த விஷயம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவர் பெங்களூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அவர் மீண்டும் பாலக்காடு பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
பல் துலக்காமல் முத்தம்..
முன்னதாக, அவினாஷிற்கும், கோயம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபிகா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், இந்த தம்பதியருக்கு சுமார் இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தனது மகனைத் தூக்கிக் கொஞ்சிய அவினாஷ், அதற்கு முத்தம் ஒன்றும் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில், அவினாஷ் பல் துலக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
முற்றிய வாக்குவாதம்
இதன் பெயரில், அவரது மனைவி தீபிகா கோபம் அடைந்துள்ள நிலையில், பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததற்காக கணவரிடம் கோபம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு அவினாஷும் கோபப்பட, இதனால், கணவர் - மனைவி இடையே சண்டையும் அப்போது நடந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதமும் தொடர்ந்து முற்றிக் கொண்டே சென்றுள்ள நிலையில், அருகில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து, மனைவி தீபிகாவை அவினாஷ் குத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மனைவிக்கு நேர்ந்த துயரம்..
இதனால், வலி பொறுக்க முடியாமல் தீபிகா அலறித் துடிக்கவே, இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக பதறியடித்த படி ஓடி வந்துள்ளனர். அங்கே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீபிகாவை அவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், அவினாஷிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததன் பெயரில் நடந்த சண்டையால் அவினாஷ் இப்படி செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல, அவினாஷ் சட்டென கோபம் அடையும் சுபாவம் உள்ளவர் என்றும், அது கூட இதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். எனினும், விசாரணை முழுதாக முடிந்த பின்னர் தான் முழுமையான காரணம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.