காதலர்களுக்குள் வந்த சண்டை.. அவுட்டிங் போனப்ப இளைஞர் செஞ்ச காரியம்.. போலீசுக்கு பறந்த போன்கால்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்துவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராஜு. இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் வயப்பட்டிருக்கிறார். சித்திராஜுவின் காதலை அந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ளவே, இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், இருவருக்குள்ளும் அவ்வப்போது சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் சமீபத்தில் அவுட்டிங் செல்ல திட்டமிட்டிருக்கின்றனர்.
அவுட்டிங்
கடந்த 18 ஆம் தேதி சித்தராஜு தனது காதலியை அழைத்துக்கொண்டு காவேரி நிசர்கதாமா பகுதிக்கு சென்றிருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான காவேரி நிசர்கதாமா காவேரி நதிப்படுகையில் அமைந்துள்ளது. காடுகள் நிறைந்த இப்பகுதிக்கு சென்ற சித்தராஜு மற்றும் அவரது காதலி பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது திடீரென தனது காதலியை சித்தராஜு கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காதலியை அங்கேயே சித்தராஜு புதைத்ததாக தெரிகிறது. அதன் பின்னர் தனது உயிரையும் மாய்த்துக்கொண்டுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாததால் சில நாட்களுக்கு பிறகே இந்த சம்பவம் குறித்து வெளியே தெரியவந்திருக்கிறது.
ரோந்து சென்ற வனத்துறையினர்
இந்நிலையில் நேற்று, காவேரி நிசர்கதாமா காடுகளில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, சித்திராஜு சடலமாக கிடப்பதை பார்த்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தலக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தலைக்காடு காவல்துறை அதிகாரிகள், இரு உடல்களையும் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.