'ஆசையா ஊருக்கு வந்தா'... 'காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்'... பதற வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jul 03, 2019 04:07 PM
காதல் திருமணம் செய்துவிட்டு ஊருக்கு வந்த தம்பதி, தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பிரெய்லியில் காதல் திருமணம் செய்த தம்பதி ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணையும் அவரது கணவனையும் தாக்கியது. இதில் நிலை குலைந்த அந்த பெண்ணின் கணவர் மயங்கி கீழே சரிந்தார். உடனே அந்த கும்பல், தாக்கப்பட்ட பெண்ணை தங்களது இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்சர் சிங் '' சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தம்பதியரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பவம் நடந்த அன்றே அந்த பெண்ணின் உறவினர்களிடம் இருந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்'' என கூறியுள்ளார்.
Viral Video: Girl's kidnapping forcibly in #Bareilly pic.twitter.com/Etxa5DQhKJ
— Newsroom Post (@NewsroomPostCom) July 3, 2019
