'வரிசையில் நிற்கச் சொன்னது ஒரு குத்தமா?'... 'இளைஞர்கள் செய்த அதிர்ச்சி காரியம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Jun 19, 2019 12:39 PM

டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நிற்க சொன்ன ரயில்வே காவலர் ஒருவரை, கொலைவெறியுடன் இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

GRP official thrashed by two youths in Deoria

உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா சாதர் ரயில் நிலையத்தில் டிக்கெட்டுகளைப் பெற பயணிகள் வரிசையில் நின்றனர். அப்போது இரண்டு, மூன்றுபேர் மட்டும் வரிசையில் நிற்காமல் இடையில் புகுந்து டிக்கெட் எடுக்க முயன்றுள்ளனர். இதைக் கண்ட ரயில்வே காவலர் ஒருவர், இளைஞர்களான அவர்களை வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து ரயில்வே காவலருக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு தரப்பினரும் சரமாரியாக கடும் வார்த்தைகளை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அதன்பின்னர் இளைஞர்கள் இருவரும் சேர்ந்து, ரயில்வே காவலரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

மேலும் காவலரை தாக்க துவங்கியதால், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே காவல் அதிகாரிகள் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தினர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

Tags : #UTTARPRADESH #POLICE #ATTACK #THRASH #YOUTH