'இப்படி ஒரு கொடூரத்த பண்ணிகிட்டு என்ன ஒரு நடிப்பு'... 'சிசிடிவி'யில் வசமாக சிக்கிய கோர தாய்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 24, 2019 11:22 AM

அன்புக்கு உதாரணமாக கூறப்படும் தாய்மார்களே சில நேரங்களில் கொடூரமாக மாறிய சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதுண்டு. அது போன்ற ஒரு கொடூர சம்பவம் தான் பலரையும் அதிரச் செய்துள்ளது.

Mother Throws 3-Month-Old Baby From 4th Floor of Lucknow Hospital

லக்னோவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அந்த குழந்தை அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போனதால் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. ஒரு கட்டத்தில் குழந்தை மிகவும் படுத்த படுக்கையாகி போனது. அப்போது குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். இதையடுத்து அந்த மருத்துவமனையிலேயே அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தனது குழந்தையை காணவில்லை என குழந்தையின் தாய் மருத்துவமனையில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தார்கள். அதில் காவல்துறையினர் கண்ட காட்சி அவர்களை அதிர செய்தது. அதில் குழந்தையை பெற்ற தாயே நான்காவது மாடியில் இருந்து வீசும் காட்சி பதிவானது.

இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது குழந்தைக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை என கருதியதால் தனது மூன்று மாதக் குழந்தையை கொன்றதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். பெற்ற தாயே குழந்தையை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #UTTARPRADESH #CCTV #LUCKNOW #KING GEORGE MEDICAL UNIVERSITY #THROWS #JAUNDICE