'என்ன கடிக்குற அளவுக்கு'... 'உனக்கு தைரியம் இருக்கா'... 'போதையில் இளைஞர் செய்த விபரீதம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 29, 2019 03:14 PM

தன்னை கடிக்க வந்த பாம்பை கடித்து துண்டு துண்டாகிய இளைஞர், தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

Drunk man bit a snake into pieces after the reptile attacked him in UP

உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பணி முடிந்து வீடு திரும்பிய அவர், மிதமிஞ்சிய போதையில் இருந்துள்ளார். இதனிடையே அவரின் வீட்டிற்குள் விஷ பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது. அப்போது போதையில் இருந்த ராஜ்குமாரை அந்த பாம்பு கடித்திருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத ராஜ்குமார், ஆத்திரத்தில் அந்த பாம்பை கடித்து குதறினார்.

இந்நிலையில் பாம்பை ராஜ்குமார் கடித்ததில் பாம்பின் விஷம் அவரின் ரத்தத்தில் கலந்து. மேலும் அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால் ராஜ்குமாரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகிறார்.

Tags : #UTTARPRADESH #DRUNK MAN #SNAKE #BIT