'சான்ஸே இல்ல'.. 'இந்த வீடியோவுக்கு'.. 'இப்படி ஒரு' விளக்கம் கொடுத்த அரசு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 28, 2019 12:54 PM

உத்தரப் பிரதேசத்தில் ஜெயிலுக்குள் இருக்கும் கைதிகள், கைகளில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருந்த வீடியோ வெளியானதால் பரபரப்பானது. 

UP govt explains for video of jail inmates having gun

இதற்கு உத்தரப் பிரதேச அரசு கொடுத்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதளங்களில் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அதன்படி, நாட்டுத் துப்பாக்கியை சிறைக்குள் கைதிகள் இருவர் வைத்திருந்தபடி வெளியான வீடியோ படுவேகமாக பரவியது. 

எனினும் இந்த வீடியோவுக்கு விளக்கம் கொடுத்த அரசு தரப்பு, சிறைக்குள் கைதிகள் துப்பாக்கியை வைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில், இருக்கும் கைதிகள் சிறந்த பெயிண்டர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் என்றும், அதனால் தத்ரூபமாக ஒரு துப்பாக்கியை உருவாக்குகிறார்கள் என்றும் கூறியுள்ளது. 

இதுபற்றி பேசிய, கூடுதல் சிறைத்துறை சிறப்பு அதிகாரி ஜெயில் வார்டன்களின் உதவியோடு இவர்கள் இதைச் செய்துள்ளதாகவும், சிறைத்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இவ்வாறு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.   இணையவாசிகள் பலரும் இந்த விளக்கதைக் கேட்டு, ‘சான்ஸே இல்ல’ இப்படி ஒரு விளக்கமா? என ஆச்சர்யப்பட்டுள்ளனர். 

Tags : #GUN #UTTARPRADESH #GOVT #JAIL #VIDEO