'எட்டு போலீஸ்காரர்களை 'என்கவுண்டர்' செய்த ரவுடி கும்பல்!' - போலீஸ் 'வராங்கண்ணு' தகவல் சொன்னதே இன்னொரு 'போலீஸ்' தானா?? - பகீர் கிளப்பும் 'பின்னணி'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை சவ்பேபூர் காவல் நிலைய போலீசார் சுற்றி வளைக்க முயற்சித்த போது, ரவுடிகள் நடத்திய எதிர் தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 5 போலீசார் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
![up kanpur encounter rowdy vikas dubey killed 8 policemen info up kanpur encounter rowdy vikas dubey killed 8 policemen info](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/up-kanpur-encounter-rowdy-vikas-dubey-killed-8-policemen-info.jpg)
விகாஷ் துபே என்னும் ரவுடியை பிடிக்கத் தான் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால், போலீசார் வரும் தகவல் முன்கூட்டியே அறிந்து கொண்ட விகாஷ், சுமார் 30 கூட்டாளிகளை அழைத்து முன்கூட்டியே தயார் நிலையில் இருந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வந்ததும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், விகாஷ் துபேவின் கூட்டாளியான தயா சங்கர் அக்னிஹோத்ரி என்பவர் கான்பூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 'போலீஸ் விகாஸை கைது செய்ய வருவதற்கு முன் அவரை கைது செய்ய வரும் தகவல் காவல் நிலையத்தில் இருந்து தான் தொலைபேசி மூலம் கிடைத்தது. அதனால் தான் விகாஷ் போலீஸ் மீது எதிர் தாக்குதல் நடத்த நிகழ்ந்தது' என தெரிவித்துள்ளார்.
கடைசியாக கிடைத்த தகவலின் படி, விகாஷ் துபே மத்தியப்பிரதேசம் அல்லது ராஜஸ்தான் மாநிலத்திற்கு தப்பித்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர் தப்பித்து சுமார் 55 மணி நேரமாகியும் இதுவரை துப்பு எதுவும் கிடைக்காமல் உத்தரபிரதேச மாநில போலீசார் தவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விகாஷுடன் தொடர்பிலுள்ளதாக சந்தேகிக்கப்படும் 20 போலீசார் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அதில் இரண்டு பேர் அதிகமாக துபேயுடன் பேசி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சவ்பேபூர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் துபேயை காப்பாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் தான் தொடர்ச்சியாக துபேயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும் துபே மீதான எந்தவொரு நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டையாக இருந்தார் என்றும் அறியப்படுகிறது.
பயங்கர ரவுடியான விகாஷ் துபே மீது அமைச்சர் ஒருவரை கொன்ற வழக்கு உட்பட இதுவரை சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)