'என் ரத்தத்தை பாலா கொடுத்தேனே'... 'இப்படி அநியாயமா கொன்னுட்டான்'... ரோட்டுல அவன சுட்டு போடுங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅநியாயமாகக் கொலை செய்த என மகன் உயிரோடு இருக்க வேண்டாம், அவனைச் சுட்டுக் கொல்லுங்கள் என தாய் ஒருவர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
கான்பூரில் ரவுடி கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விகாஷ் துபேவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 1993ம் ஆண்டு வழிப்பறி செய்து குற்றவாளியாக அவதாரம் எடுத்த ரவுடி துபே, அடுத்தடுத்து கொலைகள், கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, கடத்தல் என அவரது குற்றச் செயல்கள் தொடர்ந்து நீண்டு கொண்டே சென்றது.
இதுவரை 60க்கும் மேற்பட்ட வழக்குகள் விகாஷ் துபே மீது உள்ள நிலையில், 2001ம் ஆண்டு காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே பாஜகவின் முக்கிய பிரமுகரான அப்போதைய அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சுட்டுக் கொன்று, கொடூர கொலைகாரனாக அறியப்பட்டார் விகாஷ் துபே. இந்நிலையில் தன் மகனை போலீசார் சுட்டுக்கொல்ல வேண்டுமென விகாஷ் துபேவின் தாயார் சர்லா தேவி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ''அப்பாவி போலீசாரைக் கொன்று எனது மகன் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்து விட்டான். போலீசார் அவனைக் கண்டுபிடித்து, சுட்டுக் கொல்ல வேண்டும். அது தான் அவனுக்குச் சரியான தண்டனையாக இருக்கும். அவனால் நாங்கள் பட்ட துயரம் எல்லாம் போதும். நான் இப்போது எனது இரண்டாவது மகனின் வீட்டில் இருக்கிறேன். அவனைச் சுட்டுக் கொன்றதால் தான் இந்த வழக்கில் அனைவருக்கும் நீதி கிடைக்கும்'' என ஆவேசமாகக் கூறியுள்ளார்.