இனி இதனால எந்த பிரயோஜனமும் இல்ல... 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' மருந்துக்கு தடை விதித்த 'WHO'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வந்த நபர்களுக்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.விக்கு சிகிட்சையளிக்க பயன்படுத்தும் லோபினாவிர் / ரிடோனாவிர் மருந்துகளை தடுப்பு மருந்தாக பயன்படுத்தி வந்த நிலையில் அதனை தற்காலிகமாக நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, உலகிலுள்ள கொரோனா நோயாளிகள் சிலருக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின், லோபினாவிர் / ரிடோனாவிர் மருந்துகள் இடைக்கால சோதனைக்காக கொடுத்து வந்த நிலையில் அதன் மூலம் கொரோனா நோயாளிகள் குணமடையும் வாய்ப்புகள் மிகக்குறைவாகவும், சில நேரம் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. முன்னதாக, இந்த மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்து எனவும் தகவல்கள் பரவலாக இருந்தது.
இடைக்கால சோதனைகள் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைக்க வல்ல ஆதாரங்கள் எதுவும் அந்த மருந்துக்கு இல்லை என மேலும் விளக்கியுள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அளிக்கப்படும் மற்ற மருந்துகளின் சோதனையைத் தொடர்வதாகவும் கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு இந்த மருந்துகள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.