'டிஎஸ்பிக்கு வந்த போன் கால்'... 'நம்பி போன அதிகாரிகள்'... 'தெறித்த துப்பாக்கி ரவை'... 'அதிகாலையில் நடந்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில், விகாஸ் துபே என்ற பிரபல ரவுடி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. விகாஸ் துபே பல தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அவனைக் கண்டிப்பாகப் பிடிக்க வேண்டும் என்று, டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அப்போது அந்த இடத்தில் மறைந்து இருந்த ரவுடிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள்.
இந்த கொடூர தாக்குதலில் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பல போலீசார் காயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரவுடிகள் தாக்குதலில் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டது, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை உயர் அதிகாரிகள், அங்கு ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த போலீசார் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
