ஒரு 'வருஷத்துக்கு' அப்றம் சிக்கியிருக்காங்க... 'தலையில்லாத உடல்... 'கையையும்' சேத்து வெட்டி... 'நடுங்க' வைக்கும் 'கொடூர' பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் இருந்த வயல்வெளியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தலையில்லாத நிலையில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்த பெண் யாரென்றும் தெரியாமலும், கொலை செய்தவர்களை குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின் இந்த கொலைக்கான குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒரு வருடமாக தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் நடத்தப்பட்டு வந்த விசாரணையில், குறிப்பிட்ட அந்த கிராமத்தின் பகுதியிலுள்ள மக்க்களின் தொலைபேசி எண்களை கொண்டு தொடங்கப்பட்ட விசாரணையின் மூலம் தான் போலீசார் இந்த வழக்கின் உண்மை நிலவரத்தை கண்டுபிடித்துள்ளனர். முதலில் அந்த இளம்பெண் லூதியானாவில் உள்ள மோடிநகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் அந்த பெண் வீட்டிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போனதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அவரின் மகள் அமன் என்ற இளைஞரை காதலித்து வந்ததாகவும், காதலுடன் போயிருக்கலாம் எனவும் சந்தேகித்தனர். ஷாகிப் என்ற இளைஞர் தனது பெயரை அமன் என மாற்றி கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணை காதலித்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, வாடகை வீடு ஒன்றை எடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் பெயரை மாற்றி தன்னிடம் ஏமாற்றிய தகவல் இளம்பெண்ணிற்கு தெரிய வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஷாகிப் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கி அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். பின்னர் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பெண்ணின் அடையாளத்தை மறைக்க வேண்டி பெண்ணின் தலையை முதலில் வெட்டியுள்ளார். அதே போல, பெண்ணின் கைகளில் பெண்ணின் பெயர் மற்றும் காதலனின் பெயர் பச்சை குத்தப்பட்டிருந்ததால் கைகளையும் சேர்த்து அந்த இளைஞர் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞரின் பெற்றோர்களுக்கும் இந்த கொலைக்கு தொடர்புள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
