நல்லவேளை 'இந்தியாவுல' கொரோனா உருவாகல... 'மட்டம்' தட்டிய பொருளாதார நிபுணர்... வெடித்தது புது சர்ச்சை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 13, 2020 01:34 AM

இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா உருவாகி இருந்தால் அவர்களின் தரம் இந்தளவு இருந்திருக்காது என பொருளாதார நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Thank God coronavirus didn’t start in India says Jim O\'Neil

சீனாவில் கொரோனா கட்டுக்குள் வந்து விட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனாவை சீனா மிகவும் திறமையாக கையாண்டதாக உலக நாடுகள் பலவும் கருத்து தெரிவித்துள்ளன. அதே நேரம் அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச் முதலீடு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் பிரிட்டிஷ் பொருளாதார நிபுணருமான ஜிம் ஒ நெய்ல் சீனாவை புகழும் சாக்கில் இந்தியாவை மட்டம் தட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் சி.என்.பி.சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியொன்றில், ''கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு நெருக்கடி சீனாவுக்கு உண்டானாலும் மிகவும் திறமையாக அவர்கள் அதை சமாளித்து இருக்கின்றனர். நல்லவேளை இந்த வைரஸ் இந்தியா போன்ற நாடுகளில் உருவாகவில்லை. ஏனெனில் இந்திய நிர்வாகத்தின் தரம் சீனா அளவுக்கு இருந்திருக்காது,'' என்று பேசியிருந்தார்.

அவரது இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்தியர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு சரமாரியாக பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்திய அரசு கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #CORONAVIRUS