'28 நாட்களுக்கு கோயிலுக்கு வராதீங்க!'... சிறப்பு தரிசன டிக்கெட்டுகளில் அதிரடி மாற்றங்கள்!... கொரோனா எதிரொலியால்... 'திருப்பதி தேவஸ்தானம்' தீவிரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் 28 நாட்கள் திருப்பதிக்கு வருவதை தள்ளி வைக்கலாம் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் இருந்து வரும் சூழலில், இந்தியாவில் அதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கொரோனா எதிரொலியால் திருப்பதியில் கோயில் தரிசனத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், "கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க திருமலைக்கு வரும் பக்தர்கள் முகமூடி அணிந்து வர வேண்டும். மேலும், சுகாதாரத்துறை மூலம் திருமலை பகுதியில் மாட வீதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தரிசனத்தை வேறு நாட்களுக்கு மாற்றிக் கொள்ளவோ அல்லது ரத்து செய்யவோ அனுமதிக்கும் வசதி இன்னும் ஓரிரு நாட்களில் கொண்டு வரப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் 28 நாட்கள் திருப்பதிக்கு வருவதை தள்ளி வைக்கலாம் என்றும் தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.