‘மனம் குளிர செய்யும் நற்செய்தி...’ ‘தமிழகத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்தார்...’ சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 10, 2020 11:38 PM

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கபி பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு உடல் குணமடைந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

A person infected with the corona virus has recovered

பிப்ரவரி 27 ஆம் தேதி ஓமன் நாட்டில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர். இரண்டு நாட்களாக அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் அதிக அளவில் இருந்ததால் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் என்று சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

மேலும் ஸ்டான்லி மருத்துவ மனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா அறிகுறிகள் இருந்ததால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அங்கு அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கிண்டியில் கிங் ஆய்வு நிறுவனத்திற்கும், புனேவில் உள்ள ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு கொரோனா வைரஸ் தாக்குதல்  உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து ஒரு தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது மனைவி, உறவினர்கள் உள்ளிட்ட 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அவருடைய குடும்பத்தாருக்கு எந்த வித வைரஸ் பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது.

அவருடைய குடும்பத்திற்கு மட்டும் இல்லாமல், பீதியில் இருந்த தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு நல்ல செய்தியை பதிவிட்டுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த அந்த நபர் தற்போது  குணமடைந்துள்ளதாகவும், தமிழகம் தற்போது வைரஸ் பாதிக்கப்பட்டதாக மாநிலமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : #CORONAVIRUS #HELATHMINISTER