'இவர் எங்களுக்கு உதவி பண்ணுவாரு'... 'நாங்க 500 ரன் அடிப்போம்'... 'மிராக்கிள்' நடக்குமா மக்களே !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Jul 05, 2019 09:34 AM
அல்லாஹ் உதவி செய்தால் இன்றைய போட்டியில் மிராக்கிள் நடக்கும், அதன் மூலம் நங்கள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது போன்ற மேஜிக் நடக்குமா என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
உலகக்கோப்பை போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்ததாக நடைபெற இருக்கும் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. நான்காவது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. இருப்பினும் இந்த இடத்திற்கு தான் பாகிஸ்தான் அணி தற்போது போட்டி போட்டு கொண்டிருக்கிறது.
11 புள்ளிகளை பெற்றுள்ள நியூசிலாந்து அணி, நெட் ரன் ரேட் அடிப்படையில் +0.175 என்ற விகிதத்தில் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. ஆனால் பாகிஸ்தானின் நெட் ரன் ரேட், -0.792 ஆக உள்ளது. எனவே இன்றைய போட்டியில் நியூசிலாந்தின் ரன் ரேட்டை பாகிஸ்தான் முந்தினால் மட்டுமே அவர்களின் அரையிறுதி கனவு நனவாகும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு நிச்சயம் மிராக்கிள் நடந்தால் மட்டுமே சாத்தியம்.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல முதலில் டாஸ்யை ஜெயிக்க வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே அவர்களின் கனவு நனவாகும். அவர்கள் முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 400 ரன்கள்எடுக்க வேண்டும். அதோடு பங்களாதேஷை 316 ரன் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் 350 ரன்கள் குவித்தால், பங்களாதேஷை 38 ரன்னில் ஆல் அவுட் செய்ய வேண்டும். எனவே இது நிச்சயம் சாத்தியம் இல்லை என்பதால், பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இதனிடையே போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது ''நாங்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறவே இங்கு வந்துள்ளோம். எங்களின் முழுத் திறமையை பயன்படுத்தி வெற்றியினை பெற முயற்சிப்போம். ஆனால் எதார்த்த நிலை என்று ஒன்று உள்ளது.
நீங்கள் ஒரு பிட்ச்சில் 600, 500 அல்லது 400க்கு மேல் ரன்கள் குவிக்கும் போது, எதிரணியை 50 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்ய நினைப்பது நிச்சயம் எளிதான காரியம் அல்ல. எனவே போட்டியில் ஏதாவது 'மிராக்கிள்' நடந்தால் மட்டுமே அது சாத்தியம். அதற்கு 'அல்லாஹ்' உதவி செய்தால் நிச்சயம் அற்புதங்கள் நடக்கும்'' என சர்பிராஸ் தெரிவித்துள்ளார்.