'என்னோட ஆட்சியில எல்லாரும் சமம் தான்'... 'ஜெகன்மோகன்' போட்ட முதல் கையெழுத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jun 08, 2019 12:44 PM

ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பதுக்கு முன்பே பல அதிரடிகளை காட்டிய ஜெகன்மோகன் மீது,தற்போது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Andhra Pradesh Chief Minister Jagan Reddy Assumes Charge Of His Office

நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது.இந்த தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியினை பெற்றது.இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார்.இதையடுத்து இந்தியாவிலேயே முதல் முறையாக 5 பேரை துணை முதலமைச்சர்களாக நியமித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அதோடு 25 கேபினேட் அமைச்சர்களையும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தன்னுடைய ஆட்சியில்,அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் எஸ்.சி.,எஸ்.டி.,மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்களை நியமித்துள்ளார்.

அதோடு அரசின் நல திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரும் வகையில் 5 துணை முதல்வர்களும் செயல்படுவார்கள் என ஜெகன்மோகன் கூறியுள்ளார்.இந்நிலையில் இன்று காலை தலைமை செயலகம் வந்த ஜெகன்மோகன்,தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்தை வணங்கினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து தனது முதல் கையெழுத்தாக 'ஆஷா தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பத்திரிகையாளர்களுக்கான காப்பீடு தொகை உயர்விற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.இதையடுத்து தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜெகன்மோகனிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

Tags : #JAGAN MOHAN REDDY #ANDHRA PRADESH #YSR CONGRESS