'வீட்டுல இருக்கோம்னு மொபைல் டேட்டாவை காலி பண்ணாதீங்க'... இது நடக்க வாய்ப்பிருக்கு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அதோடு அதற்கான விளக்கத்தையும் அது வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 190-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற அனைத்து தேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பின் இயக்குநர், ராஜன் மேத்யூஸ் அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் , ''கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் செல்போன் டேட்டா பயன்பாடு என்பது 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. டேட்டா பயன்பாடு அதிகரிப்பால் செல்போன் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியிலான சுமை அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக இன்டர்நெட் வேகம் மிகவும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. இது வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள், ஆன்லைன் மருத்துவ சேவை, ஆன்லைன் பணப் பரிவர்த்தனை போன்ற சேவைகள் வெகுவாக பாதிக்கப்படும். எனவே டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்'' என ராஜன் மேத்யூஸ் அறிவுறுத்தியுள்ளார்.