100% வரிவிலக்கு... உங்களால் முடிந்த 'நிதியை' வழங்குங்கள்... தமிழக அரசு வேண்டுகோள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 27, 2020 06:02 PM

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு 3280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றை தடுக்கவும், ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடவும் தமிழக அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது.

Tamil Nadu government asked for donations from the public

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் நிதி அளிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி தங்களால்  இயன்ற நிதியை அளிக்கலாம். இதற்கு 100% வரிவிலக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

1.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும். மக்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80ஜி-யின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு.

2.நன்கொடைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் மின்னணு மூலமாக வழங்கலாம். சென்னை தலைமைச் செயலக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செலுத்தலாம். வங்கி கணக்கு எண்: 117201000000070, IFSC: IOBA0001172.

3.வெளிநாடு வாழ் மக்கள்,  IOBAINBB001, Indian Overseas Bank, Central Office, Chennai என்ற Swift Code-ஐ பின்பற்றி நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:

5.அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,

முதலமைச்சர் பொது நிவாரண நிதி,

நிதித்துறை, தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.

6.தற்போதைய நிலையில் முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடையை நேரடியாக வழங்குவதை ஊக்கவிக்க இயலாது. எனினும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி தருவோரின் விவரங்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.