கொரோனா தொற்றால் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவுமா? பரவாதா?.. விரிவான விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 20, 2020 06:35 PM

இறந்தவர்களின் சடலத்திலிருந்து கொரோனா பரவும் என மக்கள் அச்சப்பட வேண்டாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

will corona spread from the deceased body of infected

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலில் இருந்து எந்த நோய்த்தொற்றும் பரவாது என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா வைரஸால் சில நல்ல மனிதர்களை நாம் இழக்கிறோம். கொரோனாவால் சிலர் இறப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

சக மனிதர்களாகிய நாம் உலகை விட்டு பிரிந்தவர்களை மரியாதையுடன் அனுப்ப வேண்டியது நம் கடமை. உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படியே, கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல் பாதுகாப்பான முறையில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது. எனவே, மக்கள் பயப்படாமல், கொரோனாவால் இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை கீழ்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, உடல் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.