'சென்னையில் 3 வயது குழந்தை உள்பட’... ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 20, 2020 08:10 PM

சென்னையில் 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronavirus inflicts including 3 year old baby in chennai

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக இருந்த 47 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டதும் அவர் ஸ்டான்லி மருத்தவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.

அதில் 3 வயது குழந்தை உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா உறுதியான 4 பேரும், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் எண்ணூர் சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.