என்ன ஆச்சு அவனுக்கு...? 'விடாம குரைச்சுக்கிட்டே இருக்கான்...' - அப்படி 'என்ன' தான் இருக்குன்னு 'வெளிய' வந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரி மாவட்டத்தில் வளர்ப்பு நாய் உதவியால், நல்ல பாம்பை கண்டறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள கண்டமங்கலம் சிவராந்தகம் பகுதியில் வசித்து வருபவர் மனோகர். இவர் தனது வீட்டில் தென்னை, வாழை, மா மரங்கள் வளர்த்து வருகிறார்.
அதோடு இன்று காலை மனோகர் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவர் வளர்க்கும் வளர்ப்பு நாய், மா மரத்தை பார்த்து தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்துள்ளது.
முதலில் இதை பொருட்படுத்தாத மனோகர் வீட்டின்னுள்ளேயே இருந்துள்ளார். ஆனால் அவர் நாய் விடாமல் குரைத்துக்கொண்டு இருக்கவே வெளியே வந்து பார்த்த மனோகர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவரது மா மரத்தின் மீது நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதைப்பார்த்தே அவரது நாய் குரைத்துக் கொண்டிருந்துள்ளது.
அதன்பின் மனோகர் வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்ததின் பெயரில், வனத்துறை ஊழியர் சினேக் மணி என்கிற மணி விரைந்து வந்து, மரத்தில் இருந்த நல்ல பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து பின்பு காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டார்.
அந்த பகுதியில் இதுபோன்று அடிக்கடி பாம்புகள் வீட்டிற்குள் வருகின்றது என்றும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.