என் தங்கமே...! 'உன்ன பார்த்து எம்புட்டு நாளாச்சு...' - ஆனந்தக்கண்ணீரோடு பாசப்போராட்டம் நடத்திய மதுப்பிரியர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாண்டிச்சேரியில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மதுபிரியர்கள் செய்த சம்பவம் தமிழ்நாட்டில் இருப்பவர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்றுவரை இந்தியாவை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகாரிப்பதும் அதற்கு ஊரடங்கு போடுவதும், தொற்று பரவல் குறைந்த பின் ஊரடங்கை தளர்த்துவதும், தளர்வை மக்கள் சரியாக பயன்படுத்தாமல், தேவையான அளவிற்கு விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் வெளியே நடமாடுவதால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. அதன்பின் மீண்டும் அரசு ஊரடங்கு போடுவது என மெகாத்தொடர் போல் ஒன்றைரை வருடமாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு போடப்பட்டது. தற்போது 40 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது.
அதோடு மதுபானங்களுக்கு பெயர்போன புதுச்சேரியில் கடந்த 40 நாட்களாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுக்கிடந்த நிலையில் மதுபானக் கடைகளும் இன்று (08-06-2021) திறக்கப்பட்டன.
அதன்விளைவாக, குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று பல மணிநேரம் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர்.
குறிப்பாக பாண்டிச்சேரியில் மதுபான கடைகளை திறக்க காரணம், சில நாட்களாகவே கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு, சானிடைசர் குடித்து உடல்நலப் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.
இதில் என்ன விஷேசம் என்றால், மதுபானம் வாங்க வந்த குடிமகன்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து, நீண்ட வரிசையில் நின்று பலரும் மது வாங்கிச்சென்றனர். அதோடு, ஒருவர் உணர்ச்சி மிகுதியால், மதுபானங்களை ஆனந்தக் கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.