VIDEO: 'பொறுமையா தான் கிராஸ் பண்ணுவேன்...' 'உங்க அவசரத்துக்கு உடனேலாம் பண்ண முடியாது...' 'அரை மணி நேரம் நடுரோட்டில் தண்ணி காட்டிய பாம்பு...' - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் சாலையில் வந்த நாகப்பாம்பினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியான உடுப்பி கல்சன்கா சந்திப்பில் திடீரென நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீசார், பாம்பின் பாதுகாப்பிற்கும், பொதுமக்களுக்கும் எவ்வித அசம்பவிதமும் ஆகாதவகையில் போக்குவரத்தை உடனே நிறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தன்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் பாம்பு போக்குவரத்து சிக்னலை கடக்கும் வீடியோவை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
பாம்பு சுட்டெரிக்கும் வெயிலில் அதற்குண்டான பொறுமையில் கடந்த சென்றதால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுள்ளது. மேலும் அப்பகுதியில் இருந்த ஒருவர், அந்த பாம்பை பிடித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
