'கொரோனா 3வது அலை'... 'இந்த மாதங்களில் உச்சத்தில் இருக்கும்'... விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Jul 04, 2021 02:23 PM

கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

Third wave of Covid-19 may hit its peak between October-Novembe

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் சற்று குறைய ஆரம்பித்துள்ள நிலையில், 3வது அலை குறித்த எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்ட நிலையில், அந்த குழு கொரோனா 3வது அலை பாதிப்பு குறித்து தற்போது கணித்துள்ளது.

நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா வகைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.  2வது அலை தாக்க முன் கணிப்பின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தும்போது, கொரோனாவின் மூன்றாம் அல்லது நான்காம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

Third wave of Covid-19 may hit its peak between October-Novembe

3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே 3வது அலை பாதிப்பு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது என அந்த குழு தெரிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனில், மூன்றாம் அலையின்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.

இது 2வது அலை உச்சத்திலிருந்த மே மாதத்தின்போது பதிவான தினசரி பாதிப்பு அளவில் பாதிக்கும் குறைவாகும். மே தேதியன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,14,188 ஆகப் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Third wave of Covid-19 may hit its peak between October-Novembe | India News.