VIDEO: ‘அவங்களுக்கு என்ன ஆனதோ தெரியலயே’!.. ஆம்புலன்ஸ் பின்னால் பல கிலோமீட்டர் தூரம் ஓடிய நாய்.. நெகிழ வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உரிமையாளர் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்து அவர் வளர்த்த நாய் பின்னாலேயே ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் கோல்டன் ரெட்ரீவர் ரக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அப்பெண்ணுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது.
அப்போது அப்பெண் வளர்த்த நாய் அவரை சுற்றிச் சுற்றியே வந்துள்ளது. இதனை அடுத்து அப்பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்று மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். தனது உரிமையாளருக்கு என்ன ஆனதோ என்ற அச்சத்தில், ஆம்புலன்ஸ் பின்னாடியே அவர் வளர்த்த நாய் ஓடியது.
ஆம்புலன்ஸ் பின்னால் பல கிலோமீட்டர் ஓடிய அந்த நாய், உரிமையாளர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துகொண்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய நிலையில், நாயின் நன்றி உணர்வு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
