அய்யோ பாவம்...! புள்ள தண்ணி இல்லாம கிடந்து தவிக்குதே...! 'இதுக்கு ஒரே வழி தான் இருக்கு...' 'அப்பப்பா என்ன தாகம்...' - ஆசுவாசமடைந்த பாம்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடிக்கிற வெயிலை மனிதனே சமாளிக்க முடியாத நிலையில், மயங்கிய நிலையில் காணப்பட்ட நல்லபாம்பு ஒன்று செய்த சம்பவத்தின் வீடியோ தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
கோடைக்காலம் ஆரம்பித்த நிலையில், கத்திரி வெயிலே தொடங்காத நிலையில், நாம் தமிழகத்தில் உச்சகட்ட அனலை அனுபவித்து வருகிறோம். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் ஐந்தறிவு உள்ள விலங்குகளின் நிலையை குறித்து நினைத்து பார்க்க முடியவில்லை.
நமக்கு வாய் இருப்பதால் இது வேண்டும் அது வேண்டும் என கேட்கவும், அதை அனுபவிக்கவும் முடியும் ஆனால் விலங்குகளோ தண்ணீர் இருக்கும் இடங்களுக்கும் நிழலையும் தேடி அலைய வேண்டி வரும். இதனால் விளங்குநல ஆர்வலர்கள் வீட்டின் மாடியிலோ அல்லாது முகப்பிலோ தண்ணீர் கிண்ணத்தை வைக்க வலியுறுத்துகிறார்கள்.
விலங்குகளின் தாகத்திற்கு சாட்சியாக கடலூர் மாவட்டத்தில் நல்ல பாம்பு செய்த சம்பவம் வைரலாகி வருகிறது
கடலூர் அடுத்த சுத்து குளம் பகுதியில் மயங்கிய நிலையில் நீண்ட நேரம் நல்ல பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதனை கவனித்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் வீரர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலூர் பாம்பு பிடி வீரர் செல்லா, நல்ல பாம்பை பிடித்து பார்த்த போது பாம்பு நீரில்லாமல் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் செல்லாவிடம் ஒரு வாட்டர் கேன்னை கொடுத்து பாம்பிற்கு தண்ணீர் கொடுக்க சொல்லியுள்ளார். பாம்பை பத்திரமாக மீட்டு, தண்ணீர் கொடுக்கும் போது ஒரு பாட்டில் நீரை அந்த நல்ல பாம்பு முழுமையாக குடித்தது. இதையடுத்து பிடிப்பட்ட அந்த பாம்பை அவர் காப்புகாட்டில் பத்திரமாக விட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.