கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிடுது...! 'ஆள் பக்கத்துல போனாலே கொரோனா இருக்கா? இல்லையான்னு சொல்லிடும்...' எப்படி கண்டுப்பிடிக்குது...? - ஆராச்சியாளர்கள் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கு டெஸ்ட் எடுக்காமலே தொற்றை கண்டுபிடிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகளில் இன்றளவும் அதை குறித்தான ஆய்வுகளும், சோதனைகளும் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் லண்டன் ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனா டெஸ்ட் எடுக்காமலே கொரோனா வைரஸ் தொற்றை நாய்களின் மோப்பசக்தி மூலம் கண்டுபிடிக்கலாம் என தெரிவித்துள்ளார்
லண்டனில் ஜேம்ஸ் லோகன் என்ற ஆராய்ச்சியாளர், மனித உடலில் இருந்து வரும் வாசனை மூலம், அவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன என்பது ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.
அதோடு இந்த ஆராய்ச்சிக்காக, மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், சாக்ஸ் உள்ளிட்டவற்றை கொடுத்து, மோப்ப சக்தியை உணரச் செய்தனர் எனக் கூறியுள்ளார்.