என்னமோ நெளியுதே...! 'பஸ் சீட்டுக்கு அடியில இருந்த...' 'பேட்டரி பெட்டிக்குள்ள பார்த்தப்போ...' - காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம், ஓமலூரில் இருக்கும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் என சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரவில் நிறுத்தப்பட்ட பேருந்தை காலையில் எடுக்க சென்றவர் பயணிகள் அமரும் சீட்டுக்கு அடியில் உள்ள பேட்டரி வைக்கும் பெட்டியில் சுமார் 4 அடி நீளமுள்ள பாம்பு இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அதன் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த பேருந்துகள் நிறுத்தப்படும் போக்குவரத்து கழகமானது, சரியாக பராமரிக்கப்படாததால் பணிமனையை சுற்றிலும் மரம், செடி கொடிகள் என புதர்மண்டி காணப்படுகிறது. அதன் காரணமாகதான் இரவில் பேருந்துக்குள் பாம்புகள் புகுந்து விடுவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பாம்பு பயணிகள் இருக்கும் போது வெளிவந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும் எனவும் மக்கள் கவலையுற்று வருகின்றனர். அங்குள்ள போக்குவரத்து ஊழியர்களும் ஓமலூர் பணிமனை சுற்றிலும் சுற்றுசுவர் கட்டினால் முற்றிலும் தடுக்கமுடியும் என கூறுகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ கொரோனா காலகட்டத்தில் பல மாதங்கள் பேருந்துகள் நிறுத்தியே இருந்ததால் அப்பொழுது பாம்பு இருப்பது போல் எடுத்த வீடியோவாக இருக்கலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது.