என்ன இது, இன்ஹேலர் கொஞ்சம் 'வெயிட்டா' இருக்கே...! 'யூஸ் பண்ணலாம்னு எடுத்தப்போ, திடீர்னு...' - உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்த பெண்மணி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 10, 2021 01:30 PM

ஆஸ்திரேலியாவில் சிவப்பு நிற சிறிய பாம்பு ஒரு பெண்ணின் ஆஸ்துமா இன்ஹேலருக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

red snake found inside a woman\'s asthma inhaler in Australia

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பிளி ப்லியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் உடல் உபதைகளுக்காக ஆஸ்துமா இன்ஹேலரை பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்.

இந்நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த பின் தன் இன்ஹேலரை பயன்படுத்த எடுத்தபோது அது கனமாக இருந்ததை உணர்ந்துள்ளார். அப்போது தான் அதில் சுருண்டு கிடந்த பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக பாம்பு கடியில் இருந்து தப்பிய அந்த பெண் பாம்பு பிடிப்பவர்களின் குழுவை அழைத்து, அந்த சிவப்பு பாம்பை கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து கூறிய சன்ஷைன் கோஸ்ட் பாம்பு பிடிக்கும் அதிகாரிகள், 'இவ்வகையான சிவப்பு வயிறுள்ள கருப்பு பாம்புகள் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் நிறைய காணப்படுகின்றன. மேலும் அவை ஒவ்வொரு ஆண்டும் பல எண்ணிக்கையிலான மனிதர்களை கடிக்கிறது   ஆனால் இதுவரை மனித மரணங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 2 மீட்டர் நீளம் வரை வளர கூடிய இந்த பாம்பு தவளைகள், பிற ஊர்வன, சிறிய பாலூட்டிகள் மற்றும் மீன்களை சாப்பிடுகின்றன.

இந்த பாம்பு கடியால் ஏற்படும் விஷம் இரத்தப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் தசை பலவீனம் அல்லது வலி உள்ளிட்ட கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும்.

அதுவும் இந்த பாம்பு இன்ஹேலருக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது' எனக் கூறியுள்ளனார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Red snake found inside a woman's asthma inhaler in Australia | World News.