ஒரு ரவுண்ட் அடிச்சு முடிக்குற வரைக்கும் எதையும் பார்க்கல...! 'அடுத்த ரவுண்டுல தான்...' 'அத' பார்த்த உடனேயே லைட்டா... - பதறிப்போன நபர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உடையார்பாளையம் அருகே குவார்ட்டர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது. அந்த மதுவை குடித்த விவசாயி மயக்கம் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![A snake was found in a liquor bottle near Ariyalur A snake was found in a liquor bottle near Ariyalur](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/a-snake-was-found-in-a-liquor-bottle-near-ariyalur.jpg)
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி பகுதியில் வசித்து வருபவர் சோமசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (36). விவசாயியான இவர் அடிக்கடி மது அருந்துவது உண்டு.
இந்நிலையில் சுத்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில். சுரேஷ் நேற்று (14-04-2021) மதியம் மதுபாட்டில் வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் வைத்து பாட்டிலை திறந்து ஒரு கிளாசில் பாதி அளவு மதுவை ஊற்றி நீர் கலந்து குடித்துள்ளார்.
முதல் சுற்று முடிந்தபின், அடுத்த சுற்றிர்காக மீதமுள்ள மதுவை ஊற்றும்போது பாட்டிலில் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு பதறி போனார். பாம்பை கண்ட உடனேயே அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
பதற்றத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷத்தை கூறினார். உடனடியாக அவர்கள் சுரேசை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)