'பிரசவ அறையில் இருந்த மனைவியை'... 'பார்க்க துடித்த கணவர்'... 'அனுமதிக்காத டாக்டருக்கு நிகழ்ந்த நடுங்க வைக்கும் பயங்கரம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரசவ அறையில் மனைவியை பார்க்க துடித்த கணவரை அனுமதிக்காத மருத்துவரின் காதைக் கடித்து துண்டாக்கி, ரத்தம் சொட்ட வைத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் உள்ள எம்கேசிஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்த இளம் பெண்ணொருவர், நேற்று காலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த இளம்பெண் பிரசவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். அப்போது பிரசவ அறைக்கு வெளியே இருந்த அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தங்களை பிரசவ அறையின் உள்ளே விடுமாறு கத்தி கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் கொரோனா வைரஸ் சமூக விலகல் பாதுகாப்பு காரணமாக மருத்துவர்கள், பிரசவ அறைக்கு கணவரை அனுமதிக்கவில்லை. மேலும், பிரசவ அறைக்கு வெளியே நிற்காமல் வெளியேறுமாறு கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் கணவரான தரணி பிரசாத் மொகபாத்ரா, பெண் மருத்துவர் ஸ்மிருதியை தாக்கிவிட்டு, பின்னர், அங்கு பிரசவப் பணியில் இருந்த மருத்துவர் சஹில் கானின் காதை கடித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியடைந்த மருத்துவருக்கு, கடித்ததும் காது முழுவதும் பயங்கரமாக ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. மேலும் வலியால் கதறித்துடித்த மருத்துவரின் காதில் சிறு பகுதி துண்டாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மருத்துவமனை அளித்த புகாரின் பேரில் அப்பெண்ணின் கணவரை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைதுசெய்தனர். இந்த சம்பவம் அங்கு மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
