"ஊரடங்கு நேரத்திலா இப்படி அநியாயம் பண்ணுவீங்க?".. 'அமெரிக்காவில்' கொந்தளித்த 'வாடிக்கையாளர்கள்'!.. 'இந்தியர்' மீது பாய்ந்த 'வழக்கு'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 10, 2020 02:21 PM

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

Indian shop sold FMCG for 200 percent extra price in US covid19 curfew

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிளசண்டன் என்கிற இடத்தில் அப்னா பஜார் என்கிற பெயரில் பிரபல மளிகைக் கடையை நடத்தி வந்த இந்தியர் ஒருவர் ஊரடங்கை பயன்படுத்தி பொருட்களை அநியாய விலைக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

ராஜ்விந்தர் சிங் என்னும் இந்த நபர் ஊரடங்கினைப் பயன்படுத்தி பொருட்களுக்கான விலையை 200 சதவீதம் உயர்த்தியுள்ளார்.  இதுதொடர்பாக அங்கு பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது ரசீதுடன் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பல உணவுப் பொருட்கள் நெருக்கடி காலத்தில் அனுமதிக்கப்பட்ட 10 சதவீத விலை அதிகரிப்பையும், தாண்டி 200 சதவீதம் அதிகரிக்கப்பட்டு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்குள்ள அலமேடா கவுண்டி சுபீரியர் கோர்ட்டில் ராஜ்விந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டதோடு, அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆயிரம் டாலர் வரை அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.