மே 12-ந் தேதியுடன் முடிவடையும் லாக்டவுனை ஜூன் 9 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த மலேசிய அரசு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 10, 2020 10:55 PM

சீனாவின் வுஹான் நகரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது.

malaysia announced about the extension of relaxed lockdown

இதனால் தற்போது சர்வதேச அளவில் 41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டும், நீட்டிக்கப்பட்டும் தளர்த்தப்பட்டும் வருகிறது. மலேசியாவைப் பொருத்தவரை கொரோனவால் 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் 108 பேர் பலியாகியுமுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மலேசியாவில் மார்ச் 18 முதல் லாக்டவுன் எனப்படும் நடமாட்ட காட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் கோர தாண்டவம் குறைந்த பாடில்லை. மலேசியாவில் மே 12-ந் தேதியுடன் லாக்டவுன் முடிவடையும் நிலையில் ஜூன் 9 வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மொஹிதீன் யாசின் அறிவித்துள்ளார்.