ஆமா! 'அங்க' இருந்து தான் பரவுச்சு... கட்டக்கடைசியாக 'ஒப்புக்கொண்ட' உலக சுகாதார அமைப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது உலக நாடுகள் பலவும் அதிருப்தி தெரிவித்து உள்ளன. உலகம் முழுவதும் நிலவும் ஊரடங்கால் பொருளாதாரம் பலத்த அடிவாங்கி சரிந்து கிடக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு உதவியதாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்து குற்றஞ்சாட்டி வருகிறது. லேட்டஸ்டாக ஜெர்மனியும் இந்த குற்றச்சாட்டை கையில் எடுத்துள்ளது. மேலும் சீனாவின் தவறால் வுஹான் நகரில் உள்ள ஆய்வு மையத்தில் இருந்து கொரோனா பரவியதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இதை சீனா மறுத்து வந்தாலும் அமெரிக்கா தொடர்ந்து இதுகுறித்த தகவல்களை ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ வுஹான் சந்தையும் ஒரு காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் உணவு பாதுகாப்பு வைரஸ் நிபுணர் டாக்டர் பீட்டர் பென் அம்பரெக், ''உலக நாடுகளின் இந்த நிலைமைக்கு உகான் சந்தையும் ஒரு காரணம் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் எந்தளவுக்கு காரணம் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த வைரஸ் வுஹான் சந்தையில் இருந்து வந்ததா? அல்லது தற்செயலாக வைரஸ் உருவானதா? எனக் கூறமுடியவில்லை. ஆனால் இந்த வைரஸ் சந்தையிலும் அதைச் சுற்றியும் காணப்பட்டன. வைரஸ் பரவாமல் தடுக்க சீனா ஜனவரி மாதம் தான் சந்தையை மூடியது,'' என கூறினார்.