"படம் வேற லெவல்... 'லாலேட்டன்' மாஸ்..." 'திரிஷ்யம் 2' பார்த்து மிரண்டு போன கிரிக்கெட் 'வீரர்'!... 'வைரல்' பதிவு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல OTT தளமான அமேசான் ப்ரைம் வீடியோவில் சில தினங்களுக்கு முன், மலையாள நடிகர் மோகன்லால் நடித்த 'திரிஷ்யம் 2' திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வரை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இதன் முதல் பாகமான 'திரிஷ்யம்' படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நிலையில், பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டடித்திருந்தது.
பல பிரபலங்களும் திரிஷ்யம் 2 படத்தைப் பார்த்து பிரமிப்பில் உள்ள நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
I laughed out loud when George Kutty @Mohanlal created that twist in the court #Drishyam2 . If you guys dint, please start all over again from #Drishyam1. Fabulous!! Just fabulous👏👏👏👏
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) February 21, 2021
அதில், 'மோகன்லால் நீதிமன்ற காட்சியில் கொடுக்கும் ட்விஸ்ட்டை பார்த்து நான் சத்தமாக சிரித்து விட்டேன். நீங்கள் பார்க்க விரும்பினால் முதல் பாகத்தில் இருந்து மீண்டும் பார்க்கவும். மிகவும் அற்புதமான படைப்பு' என திரிஷ்யம் 2 படம், தன்னை மிகவும் கவர்ந்துள்ளதை அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
Awesome movie 👏🏼 just watched yesterday
— S.Badrinath (@s_badrinath) February 22, 2021
இந்த பதிவின் கீழ், முன்னாள் இந்திய வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத், 'அற்புதமான படம். நேற்று தான் பார்த்தேன்' என கமெண்ட் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
