'இந்த' பிறந்தநாளுக்கு நான் அவங்க கூட இல்ல... சூப்பர்ஸ்டாரின் 'பர்த் டே' ஸ்பெஷல்... 'EXCLUSIVE' INTERVIEW உள்ளே!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 21, 2020 05:51 PM

மலையாள சினிமா உலகில் கடந்த நாற்பது ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்து வருபவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். மாஸ், கிளாசில் மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பும் மோகன்லாலின் நடிப்பிற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஒரு பக்கம் சிறிய அளவில் சரிந்து, கையில் வேட்டியை மடக்கி பிடித்து கொண்டு ராஜ நடை நடந்து வரும் மோகன்லாலின் 60 - வது பிறந்தநாளான இன்று 'Behindwoods Ice' சேனலிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Mohanlal exclusive interview on his 60 th birthday

இந்த பேட்டியில், தனது குடும்பம் குறித்தும், தனது இயக்கத்தில் வளர்ந்து வரும் 'பாரோஸ்' திரைப்படம் குறித்தும், தனது நடிப்பில் வெளிவரவிருக்கும், மலையாள சினிமா உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'மரைக்காயர்' குறித்தும் மேலும் பல சுவாரஸ்ய தகவல் குறித்தும் பகிர்ந்து கொண்டார். முன்னதாக சென்னையிலுள்ள தனது வீட்டில் இருப்பதால் தனது தாயுடன் இந்த பிறந்தநாளை கழிக்க முடியவில்லை என கூறினார்.

'பாரோஸ் திரைப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. படத்திலுள்ள சில நடிகர்கள் ஸ்பெயின் மற்றும் வேறு சில பகுதிகளில் இருப்பதால் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிய தாமதமாகும். அதே போல மரைக்காயர் திரைப்படமும் தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை மாறி தியேட்டர்கள் திறப்பதற்கான படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும்' என தெரிவித்தார்.

தனது வாழ்க்கையின் சக்ஸஸ் மந்திரம் குறித்து, 'நான் எனது வாழ்நாளில் வெற்றியடைந்த மனிதன் ஆகி விட்டேனா என நான் எப்போதும் சிந்தித்து கொண்டே இருப்பது தான் என்னுடைய வெற்றி மந்திரம். இப்போதும் நான் என்னை சாதாரண மனிதனாகவே கருதுகிறேன்' என தெரிவித்தார். மோகன்லால் பகிர்ந்து கொண்ட மேலும் சில சுவாரஸ்யமான தகவல் குறித்து தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.