"என்னய்யா, 'மேட்ச்' நடுவுல தமிழ் எல்லாம் பேசுறீங்க??..." மைக்கில் பதிவான 'ஆடியோ'... பேசுனது 'அஸ்வின்' இல்ல.. அது யாருங்கிறது தான் 'ஹைலைட்டே'... வைரல் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Feb 16, 2021 04:47 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

virat kohli and rishabh pant encourage ashwin in tamil

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி கடுமையாக திணறியது. அதிலும் குறிப்பாக, அஸ்வின் தனது சுழலால் இங்கிலாந்து அணியை திணறடித்தார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது மட்டுமில்லாமல், பேட்டிங்கிலும் சதமடித்து அஸ்வின் அசத்தினார்.

virat kohli and rishabh pant encourage ashwin in tamil

சொந்த ஊரிலேயே சுற்றியிருந்த பார்வையாளர்களை, தனது ஆல் ரவுண்டர் திறமையால் அஸ்வின் குதூகலப்படுத்தினார். முன்னதாக, இந்த போட்டிக்கு நடுவே, அஸ்வின் பந்து வீசிக் கொண்டிருந்த போது, விராட் கோலி, 'வேற லெவல், வேற லெவல்' என கூற, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அதனை தொடர்ந்து, 'நல்லா இருக்கு. வேற லெவல்' என தமிழில் கூற முயற்சி செய்தார்.

 

இது தொடர்பான ஆடியோ, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அனைத்து போட்டிகளிலும் ரிஷப் பண்ட், பந்து வீச்சாளர்களை மிகவும் நகைச்சுவையான முறையில் உற்சாகப்படுத்தும் நிலையில், சென்னையில் போட்டி நடைபெறுவதால், அஸ்வினை தமிழில் உற்சாகப்படுத்தியது தொடர்பான ஆடியோ தற்போது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat kohli and rishabh pant encourage ashwin in tamil | Sports News.