'ஆஸ்திரேலியா'வில் ஆட்டம் போட்ட 'இந்திய' வீராங்கனை... 'நடனம் சூப்பர்' என பதிவிட்ட அஸ்வின்... 'வைரல் டான்ஸ் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Suriyaraj | Feb 28, 2020 07:10 AM

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண்கள் அணி வீராங்கனை ஜெமிமா, பெண் பாதுகாவலருடன் இணைந்து ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு இந்திய அணியின் அஸ்வின் “நடனம் சூப்பர்" என பதிலளித்துள்ளார்.

Jemimah Rodrigues shows off her dance moves with security guard

இந்திய பெண்கள் அணி தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் பங்கேற்று விளையாடி வரும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக மைதானத்துக்கு செல்லும் வழியில் பெண் பாதுகாவலருடன் இணைந்து ஜெமிமா திடீரென இந்தி பாடலுக்கு நடனம் ஆடினார்.

இந்த வீடியோவை ஐ.சி.சி., தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. சுமார் 40,000 பேர் வரை இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் அஷ்வின் அளித்த பதிலில், 'நடனம் சூப்பர்' என தெரிவித்துள்ளார்.

Tags : #JEMIMA RODRIGUES #DANCE #AUSTRALIA #MELBOURNE #ICC #ASHWIN