இங்கிலாந்தை திணற விட்ட 'அஸ்வின்'... வேற லெவலில் கொண்டாடிய 'ஐபிஎல்' அணி... அவங்க 'ட்வீட்' பண்ண 'போட்டோ' தான் இப்போ செம 'வைரல்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Feb 15, 2021 09:45 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

delhi capitals celebrates ashwin by edited master poster

இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு இன்னும் 429 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளதால், இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது போல் தெரிகிறது. இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல் சாதனையை படைத்த அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து, இங்கிலாந்து அணிக்கு கடினமான ஸ்கோரை நிர்ணயிக்கவும் உதவினார்.

delhi capitals celebrates ashwin by edited master poster

சொந்த ஊரில் வைத்து நடைபெறும் டெஸ்ட் போட்டியில், ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மென்ஸ் காட்டி, பட்டையை கிளப்பிய அஸ்வினுக்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், சாதனையை படைத்த அவரை கொண்டாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.

delhi capitals celebrates ashwin by edited master poster

இந்நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் 'மாஸ்டர்' படத்தின் போஸ்டரில், விஜய் முகத்திற்கு பதிலாக அஸ்வின் முகத்தை எடிட் செய்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். ஐபிஎல் அணி ஒன்று, விஜய் படத்தின் புகைப்படத்தை பயன்படுத்தி அஸ்வினை பாராட்டியுள்ள நிலையில், இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களிடையே அதிகம் வைரலாகியுள்ளது.

 

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Delhi capitals celebrates ashwin by edited master poster | Sports News.