சூப்பரா போயிட்டு இருந்த 'மேட்ச்'... திடீர்னு 'கிரவுண்ட்'ல அஸ்வின் செஞ்ச 'செயல்'... ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்த சென்னை 'மக்கள்'... மெர்சல் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது.

இந்த போட்டி முழுக்க இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், சென்னை மண்ணின் மைந்தனான அஸ்வின், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பின்னி பெடலெடுத்தார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 8 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார்.
பல மாதங்களுக்கு பிறகு, இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் சென்னை ரசிகர்கள், இந்தியாவின் பேட்டிங், பவுலிங் என இரண்டையும் கொண்டாடித் தீர்த்தனர். இதனிடையே, மைதானத்தில் நின்று கொண்டிருந்த அஸ்வின், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு, சிறிய நடன அசைவுகளை செய்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
Ashwin doing the #VaathiComing shoulder drop at the Chepauk! Happy ending to a proper cricket festival in Chennai! 🤩🤩🤩🔥🔥🔥🔥 #INDvENG #Master pic.twitter.com/VEUQnEBoDL
— Srini Mama (@SriniMaama16) February 16, 2021
இது தொடர்பான வீடியோ, தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில், அஸ்வினைப் பாராட்டி, மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய்க்கு பதிலாக, அஸ்வினை எடிட் செய்து பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
