“இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆள் அழகுராஜா வேனுங்கிறது”!.. ஹெலிகாப்டர் பழுதை சரி செய்த ராகுல் காந்தி! வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 11, 2019 03:26 PM

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து தானும் சரி செய்யும் புகைப்படைத்தை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

rahul gandhi and his security force quickly fix the helicopter repair

இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் 6 ஆம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தயாரானார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசம் சென்ற ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தனது பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து தானும் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், “இது சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயற்சித்ததால் விரைவாக பழுது சரிசெய்யப்பட்டது. இந்நிலையில், பயப்படும் அளவிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, ராகுலின் இந்த பதிவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

 

Tags : #RAHULGANDHI #HIMACHAL PRADESH